Aada Sonnaal

ஆடச் சொன்னால், ஆடுவேன்
ஆடும் உன்தன் ஆட்டம் தீரவே
பாடச் சொன்னால், பாடுவேன்
ஆயுள் ரேகை பார்த்து கூறவே

எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது
உனக்கு தெரியவில்லையா?
உனது முடிவில் ஒரு திரிபுரம் எறிவது
உனக்கு தெரியும் அந்த நேரம் வரும் வரை

ஆடச் சொன்னால், ஆடுவேன்
ஆடும் உன்தன் ஆட்டம் தீரவே
ஆடச் சொன்னால், ஆடுவேன்

துள்ளாதே நீ, உனக்கெஅறு உண்டான
தெய்வத்தை வேண்டிக்கொள்
பெண் சாபோமா பலித்திடும்
எப்போதும் தப்பாது கேட்டுக்கொள்

முட்டாள்கள் விதைத்தது, முள்ளாக விளைந்தது
கட்டாயம் அறுத்துக் கொள்வாய்
உன்னாலே அழிந்ததும் கண்ணீரில் நனைந்ததும்
என்னென்று தெரிந்துக்கொள்வாய்

கொஞ்சம் பொறு நீப் பாட
நான் கேட்கிறேன்
கெஞ்சிக் கெஞ்சி நீ ஆட
நான் பார்க்கிறேன்

தர்மம் என்னும் யுத்தம்
இன்றே தொடங்கட்டும்
தஞ்சம் என்றே உந்தன் நெஞ்சம்
அடங்கட்டும் போ போ

ஆடச் சொன்னால், ஆடுவேன்
ஆடும் உன்தன் ஆட்டம் தீரவே

பெண்ணாலேதான் உனக்கொரு ஆபத்து
உண்டாகப் போகுதே
கண்ணீரில்தான் உலகத்தில் பூகம்பம்
ஆரம்பம் ஆகுதே

அப்போது நடந்ததும் இப்போது நடப்பதும்
பாஞ்சாலி சபதங்களே
அப்போது ஜெயித்ததும் இப்போது ஜெயிப்பதும்
சாகாத தர்மங்களே

தாயின் கண்ணில் நீரல்ல
தீ ஊழித்தீ
தோற்பதிங்கு யார் சொல்லு?
நானல்ல நீ

பொங்கும் எங்கள் சிங்கம்
இங்கே வரும் வரும்
ரெண்டில் ஒன்று என்றே இன்றே
எழும் எழும் பார் பார்

ஆடச் சொன்னால், ஆடுவேன்
ஆடும் உன்தன் ஆட்டம் தீரவே
பாடச் சொன்னால், பாடுவேன்
ஆயுள் ரேகை பார்த்து கூறவே

எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது
உனக்கு தெரியவில்லையா?
உனது முடிவில் ஒரு திரிபுரம் எறிவது
உனக்கு தெரியும் அந்த நேரம் வரும் வரை

ஆடச் சொன்னால், ஆடுவேன்
ஆடும் உன்தன் ஆட்டம் தீரவே
ஆடச் சொன்னால், ஆடுவேன்



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link