Nandri Unakku

நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே

மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே ஹேய்
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே

நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே

மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே

அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே
உமையவளே
மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி
நிகழுமடி

நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே
கோடானு கோடியிலே நானும் உன் சேயே
கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே

வேப்பிலையில் ஆடை கட்டி
வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி

நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே

மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே

படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும்
நிழல் கொடுக்கும்
நிழல் கொடுக்கும்

அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்
உந்தன் அடியை பணிந்தே
வணங்கி உலகிருக்கும்
உலகிருக்கும்

பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி

காலம் வந்தால் கண் திறப்பாய்
தீயவரை நீ எரிப்பாய்
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி

நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே

மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே

நன்றி உனக்குச் சொல்ல
வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும்
ஆயிரம் கண் சூலியே

மஞ்ச நீர் தெளிக்குதம்மா
ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே
குங்குமச் சிங்காரியே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link