Yaararu (Female)

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

யாராரு என்னான்னுதான்
சொல்றேன் டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

ஆயி ஆத்தா யாரும் இல்லா நாய் இதுதான்
ஆளக் கண்டா ஊளை இடும் நரி இதுதான்
மூக்கப் பாரு முழியப் பாரு செங்கொரங்கு
செங்கொரங்கு கூட ஒரு பெண் கொரங்கு
பொண்ணு இவ சோறு பொங்குறவ
ஒரு பூனையப் போல் திருடித் திருடித் திங்கிறவ

இந்தப் புள்ள கணக்குப் புள்ள
இவரப் போல கண்டதில்ல
கை புடிச்சு கால் புடிச்சு
வாழுறதில் காக்கைதான்

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா

வாய்க்கு ஒரு பூட்டில்லாத மாடு இது
வந்த இடம் சொந்தமுன்னு மேயுறது
கட்டிப் போட ஆள் இல்லாத கழுதை இது
காளையோடு சேந்துக்கிட்டு ஒதைக்கிறது

பொதி சுமந்தா நல்ல புத்தி வரும்
அந்த புத்தி இந்த கழுதைக்குத்தான் எப்ப வரும்
மானம் இல்லே ஈனம் இல்லே
சூடும் இல்லே சொரணை இல்லே
நாலும் கெட்ட நாய்களுக்கு
வாய் மட்டும் நீளம்தான்

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது
வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது
ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது
எத்தனையோ இன்னும் இங்கிருக்கு
அட அத்தனைக்கும் திருட்டுலதான் பங்கிருக்கு

விட்டு வெச்சா வளந்து விடும்
காரியமே கெட்டு விடும்
ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம்
உறிஞ்சும் இந்த அட்டைதான்

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா
நான் சொன்னா ஏத்துக்கோடா

ஹேய் யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link