Paal Irukkum

யம்மா யம்மா, யப்பா யப்பா
யப்பா யப்பா, யம்மா யம்மா

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூட சுமந்து வரும் சிட்டுக்குருவியே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூட சுமந்து வரும் சிட்டுக்குருவியே

ஒன் கட்டழகுக் கட்டிச் சோத்துல
மொத்தமா கட்டி வச்சது இங்க யாரு?
அதக் கூறு
ஆணி முத்தழகை சின்ன முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சது இங்க யாரு?
அதக் கூறு

யம்மா யம்மா, யப்பா யப்பா
யம்மா யம்மா, யப்பா யப்பா

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

முப்பத்து அஞ்சு வயசு வந்தும்
முத்தங்கள கொடுத்தது இல்ல
முத்தமிடும் காட்சிகள படத்தில பாத்தோம்
எப்ப அந்தப் பாக்கியம் தான்
எங்களுக்கு கிடைக்குமுனு
நம்ம ஊரு சோசியன அடிக்கடி கேட்டோம்

மத்துப் போல ஏன்டி அம்மா
எங்கள நீ கறையுர?
வண்டுப் போல மாறி வந்து
மனச எல்லாம் கொடையுற
இத்தன நாள் தூங்க வச்ச
ஆசைய நீ எழுப்புற
கற்புடைய ஆம்பளைங்க
எங்கள ஏன் கெடுக்குற?

சிக்கிட வைக்கிறயே
மனம் சிக்கிட வைக்கிறயே
யம்மாடி யப்பாடி என்னனு சொல்லுவோம்
என்னாவோ பன்னுறியே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூட சுமந்து வரும் சிட்டுக்குருவியே

அய்ய தட்டில் இட அனக்கட்டி வந்ததென்ன
கை ரெண்டும் துடிக்கிறதா
புட்டுப் புட்டுத் தின்ன?
மொச்சக் கொட்ட மீன் கொழம்பு
கச்சக்கட்டி வந்ததென்ன
எச்சில் இங்க சுரக்கிறதா
தொட்டுத் தொட்டுத் தின்ன?

உன்னுடைய சேலைகள துவச்சு
இங்குப் போடுறோம்
உன்னப் பத்தி பாட்டெழுதி
தெருத் தெருவா பாடுறோம்
என்னக் காண queue வரிச
நிக்கிதையா ரோட்டுல
ஒங்க நெஞ்சம் வேகுறதா
என்னுடைய heat'la

அற்புதச் சித்திரமே
நாங்க எப்பவும் கொத்தடிமே
முன்புறம் பின்புறம் பொன்னென மின்னுற
சந்தனப் பாற்க்குடமே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூட சுமந்து வரும் சிட்டுக்குருவியே

ஒன் கட்டழகுக் கட்டிச் சோத்துல
மொத்தமா கட்டி வச்சது இங்க யாரு?
அதக் கூறு
ஆணி முத்தழகை சின்ன முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சது இங்க யாரு?
அதக் கூறு

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூட சுமந்து வரும் சிட்டுக்குருவியே



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link