Theeradha Baaram (feat. Rishi K)

தீராத பாரம்
என்றென்னை நீங்குமோ
வாராத அந்நாளும்
இன்றே வாருமோ
சேராத நதியாக
நானும் நிற்கிறேன்
காட்சிக்குள் பிழையாக
இங்கே வாழ்கிறேன்

விடியல்கள் நிகழ்ந்திட
மனம் மட்டும் இருளினில்
கரைந்து போகுதே
நினைக்கின்ற யாவும்
கனாவிலே கண்டு
மாய்கிறேன்

ஆறாத காயங்கள்
தந்து செல்லும் விதியே
நீ இருந்தும் நகரும்
என் ஜீவ நதியே
ஜீவ நதியே

மீட்பென்னை தேடும்
என்றெதிர் பார்க்கிறேன்
மனத்தீயில் முழுதாய்
கருகி நான் வாடவே
தணலாய் கிடக்கும் நான்
மீண்டும் எழுவேனோ
முடிவின் விளிம்பில் நின்றும்
நான் தொடர்வேனோ

விடியல்கள் நிகழ்ந்திட
மனம் மட்டும் இருளினில்
கரைந்து போகுதே
நினைக்கின்ற யாவும்
கனாவிலே கண்டு
மாய்கிறேன்

ஆறாத காயங்கள்
தந்து செல்லும் விதியே
நீ இருந்தும் நகரும்
என் ஜீவ நதியே
ஜீவ நதியே



Credits
Writer(s): Rishi K
Lyrics powered by www.musixmatch.com

Link