Adiye Pogathe

அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

சின்னஞ்சிறு சிரிப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

இது காதலா?
இல்லை கனவுதானா?
என் மனதிலே
எழும் கேள்விக்கு
பதில் உள்ளதா?

அடியே போகாதே
அடியே போகாதே

தினமும் நீ கடந்து செல்லும் சாலையில் நான் நிற்கிறேன்
இருந்தும் ஏன் அனைத்தையும் நான் புதியாய் பார்க்கிறேன்
நகரும் நொடிகளெல்லாம் நீளவே நான் கேட்கிறேன்
அடடா உன் அருகிலே நான் என்னை மறக்கிறேன்

உன் பாதையில்
நான் சேரவா?
உன் மெளனத்தில்
நான் பேசவா?

என்னோடு நீ
உன்னோடு நான்
என்றென்றும் வாழ்வோமே வா

அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

சின்னஞ்சிறு சிரிப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

அடியே போகாதே
அடியே போகாதே
அடியே போகாதே
அடியே போகாதே (போகாதே)



Credits
Writer(s): Josh Thomas Mathew, Tanushree Kumaresan
Lyrics powered by www.musixmatch.com

Link