Amman Song

வீரசூர மாகாளி வாராளைய்யா
வேட்டையாட தானாக வாராளைய்யா
நாகமாலை சூடித்தான் வாராளைய்யா
நாலுதிக்கும் ஓடோட வாராளைய்யா

ஆடுபலி தந்தாலும் ஆவேசமாய்
ஆங்கார ஓங்காரி வாராளைய்யா
கோழிபலி தந்தாலும் ஓயாமலே
குறுங்கோட மாகாளி வாராளைய்யா

வீரசூர மாகாளி வாராளைய்யா
வேட்டையாட தானாக வாராளைய்யா
நாகமாலை சூடித்தான் வாராளைய்யா
நாலுதிக்கும் ஓடோட வாராளைய்யா
அவ சூறக்காத்தா வாராளைய்யா
அவ சூறையாட வாராளைய்யா
சூடம் ஏந்தி வாராளைய்யா
சுயரூபம் காட்ட வாராளைய்யா
இவ பாத்தா பாத்தா இடமே தீயா மாறி போகும் தான்

ஆடுபலி தந்தாலும் ஆவேசமாய்
ஆங்கார ஓங்காரி வாராளைய்யா
கோழிபலி தந்தாலும் ஓயாமலே
குறுங்கோட மாகாளி வாராளைய்யா

ஓஓஊ கோட்டான்கள் கூவும் நேரம்
கோரதாண்டவம் ஆடி வாரா வாரா
ஆந்தைகள் கூட்டம் அலற - இவ
ஆச்சான்னு போச்சான்னு பாக்க வாரா
வெப்பாலை மர தும்பாட்டம் வெரல் கொண்டாளே பெருங்காளி
தப்பாக எதும் கண்டாலே கொல்லி வெப்பாளே அகங்காரி
இந்த காடே நாடே அதிர வருவாளே

வீரசூர மாகாளி வாராளைய்யா
வேட்டையாட தானாக வாராளைய்யா
நாகமாலை சூடித்தான் வாராளைய்யா
நாலுதிக்கும் ஓடோட வாராளைய்யா

வீரசூர மாகாளி வாராளைய்யா
வேட்டையாட தானாக வாராளைய்யா



Credits
Writer(s): Vivekanandan Munusamy, Sam Charles
Lyrics powered by www.musixmatch.com

Link