Azhagey (feat. Sabari)

அழகே அழகே
என்ன பாத்ததும் பூக்குறியே
எனையே எனையே
நெஞ்சக் கொளுத்திட்டு போகுறியே

நடையில் உடையில்
பல தூண்டிலும் போடுறியே
நொடியில் அழகில்
சுத்த பேக்குனு ஆக்குறயே

ஏன்டி நீ அபகரிச்ச
காதல கட விரிச்ச
ரா பகல் மாத்தி வச்ச
ஓன் பேர சொல்லி மந்திரிச்ச

உள்ளுக்குள்ள ஒரு ஒலகம்
ஒன்ன மட்டும் சுத்தி சொழலும்
எப்பவுமே ஒட்டி கெடக்கும்
நிழலும் ஓன் கூட சேரும்

அழகே வீசுதடி
கண்ணாடியும் பொய் பேசுதடி
நிலவு ஒன்னும் தொலைவு இல்ல
தோலில் நீ சாஞ்சபடி நடந்தா

தீ பத்தி எரியுதடி
காதலும் புரியுதடி
வார்த்தையும் பறக்குதடி
வீடது மறக்குதடி

அழகே அழகே
என்ன பாத்ததும் பூக்குறியே
எனையே எனையே
நெஞ்சக் கொளுத்திட்டு போகுறியே

நடையில் உடையில்
பல தூண்டிலும் போடுறியே
நொடியில் அழகில்
சுத்த பேக்குனு ஆக்குறயே

ஏன்டி நீ அபகரிச்ச
காதல கட விரிச்ச
ரா பகல் மாத்தி வச்ச
ஓன் பேர சொல்லி மந்திரிச்ச



Credits
Writer(s): Puratchi Nanbi
Lyrics powered by www.musixmatch.com

Link