Timeless Love (From "Custody") (Tamil)

ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா
அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா
எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா

ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா
எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை
நான் என்றும் மறப்பேனா
வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி
கொள்ளை கொண்டு போன காட்சி என்று மறப்பேன

ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா

எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய்
எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய்
ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள்
பென்சில் தூக்கிச் சென்றாள்
பென்சிலாலே எந்தன் வாழ்வை மாற்றித் தீட்டினாள்

கல்லூரி நாட்கள் யாவிலும்
என் தோகையாகினாள்
தேர்வு நாளின் போதிலே
என் தாளென்றாகினாள்

அன்னை தெம்பாலே
தந்தை அன்பாலே
எந்தன் வாழ்வை ஆள போகும்
ரேவதி என் பாதி

ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்
கால எந்திரத்தில் ஏறி போகலாம்
காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்
ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்

விண்ணே பூ தூவ
மண்ணே கொண்டாட
திருமணம் நடக்கிறதோ
நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்
கையை கோர்த்து ஆடும் காட்சி
தோன்ற போகின்றதோ

ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்



Credits
Writer(s): Ramajogayya Sastry, Yuvan Shankar Raj, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link