Sevvandhi Poove (From "Karumegangal Kalaigindrana")

செவ்வந்தி பூவே, செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே வா ஓ!
அம்மைக்கு பிறகு, ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே வா ஓ!

நீ போன பிறகு மூச்சே போச்சு
நீ வந்த உடனே உயிர் வந்துச்சு
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகே ஈரம் வந்துச்சு

உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ
உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ

தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம்
ஒய்யார அழகே நீ தான்
கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும்
காட்டிய தேவதை நீ தான்
கரும்பு மொழியும், குறும்பு நகையும்
கவல போக்குது தாயே!
எனது குல தெய்வம் நீயே!
எனக்கு அருள் கொடு தாயே!

உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ
உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ

(ஹாஹஹ, ஹாஹஹஹ)
(ஹாஹஹ, ஹாஹஹஹ)

ஒத்த இலையில் நிக்கிற மரம் போல்
உன்ன சுமந்து நான் இருக்கேன்
ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு
உசுரா சுமந்து நான் கெடக்கேன்
பறட்ட தலையில சுருட்ட முடியில
கூடு கட்டிக்கொள்ளு குயிலே!
காடு விட்டு வந்த மயிலே!
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே!

உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ
உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ

செவ்வந்தி பூவே, செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே வா ஓ!
அம்மைக்கு பிறகு ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே வா ஓ!

நீ போன பிறகு மூச்சே போச்சு
நீ வந்த உடனே உயிர் வந்துச்சு
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகே ஈரம் வந்துச்சு

உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ
உயிரே ஓஓஓ, உறவே ஓஓஓ



Credits
Writer(s): Vairamuthu, G V Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link