Thoda Thoda Malarndhadhenna (From "Indira")

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொட தொட மலர்ந்ததென்ன
பூவே தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்

நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

காதலர் தீண்டாத
பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது
ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம்
பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே
மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link