Hey Siri - From “Think Indie”

பெண்ணே பெண்ணே
நீ போதை இல்லை
தீராதே நீங்காதே
பெண்ணே பெண்ணே
நான் virus இல்லை
அஞ்சாதே நீங்காதே

Hey சண்ட போட்டாலும்
மண்ட எல்லாம் நீ
கோபம் வேண்டாமே
வா நீ

Hey கொஞ்சம் மேய்ந்தாலும்
நெஞ்சமெல்லாம் நீ
மற்ற பெண்கள் பொழுதுபோக்கு
நீதானே என்றாய்

Hey காதலி அடித்தாய் எனில்
உன் கை தான் வலிக்கக்கூடும்
Hey காதலி சிரித்தாய் எனில்
என் பூமியே விடியக்கூடும்
சிரி சிரி சிரி hey hey hey சிரி

அன்பே அன்பே நான் ராமன் இல்லை
அதிலேதும் பிழையில்லை
பெண்ணே பெண்ணே நீ சீதை இல்லை
எரிக்காதே முறை இல்லை

Hey போர்களில்லாமல் நாடுகள் இல்லை
யாரு தப்பில்லை நீ சொல்லேன்
கெட்ட சொல்லெல்லாம் திட்டி தீர்த்தாலும்
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து என்னை கொள்ளேன்

Hey காதலில் பிரிந்தோமெனில்
உலகம் இன்றே முடியக்கூடும்
நீ தூறலாய் சிரித்தாயெனில்
என் வானமே விடியக்கூடும்
சிரி சிரி சிரி hey hey hey சிரி

முதல் நாள் குறுஞ்சிரிப்போ
மயக்கும் மலர் சிரிப்போ
நனைக்கும் மழை சிரிப்போ
அணைக்கும் வெயில் சிரிப்போ

அடிக்கும் அலை சிரிப்போ
கடிக்கும் இதழ் சிரிப்போ
பொடி உன் துடி சிரிப்போ
இழுக்கும் எழில் சிரிப்போ

மறைக்கும் சிறை சிரிப்போ
இறைக்கும் பரழ் சிரிப்போ
உரிக்கும் எழில் சிரிப்போ
கிறக்கும் மகிழ் சிரிப்பா

ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ



Credits
Writer(s): Kiran Surath N, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link