Thithikum Theeai

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்
தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்

ஹோ... சுடச்சுடச்சுட காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்
தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்

முதன் முதலாய் சறுக்க வைத்தாய்
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் போட்டுடைத்தாய்
உடல் ஐந்தின் பூட்டுடைத்தாய்
பூவிதழின் தாழ் திறந்தாய்

இரண்டே இரண்டு இதழைக் கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனைத் திருடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
தூரத்தில் தூரத்தில்
பூச்செண்டு நீதானே
பக்கத்தில் வந்தாலே
பூகம்பம் நீ தானே

முக்கனி மூன்றும் ஒன்றாய்க்காய்க்கும்
சர்க்கரை மரமும் நீதானே
கூடைக்கொண்டுப் பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே

பேரின்பம் எதுவென்றால்
பெண் என்று சொல்வேனே
பெருந்துன்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே

என் உடலை உருக வைத்தாய்
கண்ணெதிரே கரையவைத்தாய்
தொடும்போதே தொலையவைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்

ஹோ... காமம் என்பது கத்தியைப்போலே
குத்திக்குத்திக் கொன்றிடுமே
கண்கள் இரண்டும் கேடயமாக
தடுக்கும் போதும் வென்றிடுமே
காயங்கள் இல்லாத காமம் தான் இங்கேது
தீக்குச்சித் தீண்டாமல் தீபங்கள் தோன்றாது
ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே
வேட்டையாட விரும்பிடுமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டுத் திரும்பிடுமே

மோகங்கள் எப்போதும்
மின்சாரம் போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம்
நம் தேகம் தூளாகும்

இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழை கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்க வைத்தாய்

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்
தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்

ஹோ... சுடச்சுடச்சுட காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே

முதன் முதலாய் சறுக்க வைத்தாய்
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் போட்டுடைத்தாய்
உடல் ஐந்தின் பூட்டுடைத்தாய்
பூவிதழின் தாழ் திறந்தாய்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link