Naracha Mudi (From "Dhruva Natchathiram")

நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட

உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட

தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
எதிர வந்தது நீயா

தட்டுத் தடுமாறிவிட்டேன்
தவிக்க விட்டது ஏன்யா
குரு குரு பார்வ பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா

நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட

பாதி கிருக்கில் பற பறத்து
பசல படந்து போச்சு
மீதி கிருக்கில் முனு முனுத்து
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு

நாளு முழுக்க உன்ன நெனச்சி
நடக்க மறந்து போச்சு
தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த
கனவு செவந்து போச்சு

மாரி அம்ம மனசு வச்சா
மாரி அம்ம மனசு வச்சா
கழனி நல்லா விளையும்

கூர பொடவ தரியில் நெஞ்சு
நுனியில் மஞ்சள் தொழங்கும்
கழுத்துல தாலி மின்ன
கழுத்துல தாலி மின்ன
கருக மணியும் நெளியும்

நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட

உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட

தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
எதிர வந்தது நீயா
தட்டுத் தடுமாறிவிட்டேன்
தவிக்க விட்டது ஏன்யா
குரு குரு பார்வ பட்டு பட்டு பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா



Credits
Writer(s): J Harris Jayaraj, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link