Achamrnnadi

அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
அச்சம் என்னடி ஏய் நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

ஹே கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
ஹே கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பல்கலைகழக் தேர்விலே
எங்கள் பெண்களே பெரிதும் முன்னணி
என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே
ராணுவம் காவல் துறையிலே
பெண்கள் ஏகமாய் வந்து சேர்ந்த பின்
ஆண்கள் ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே
பாரத மாதா பெண்தானே
பாயும் நதியும் பெண்தானே
இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில்
நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும்

அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

நெஞ்சிலே ஆணை சுமந்தவள்
கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள்
சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள்
கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின்
சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின்
மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள்
பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள்
முட்டாளுக்கும் கருணை காட்டுவாள்
அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால்
அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள்

அச்சம் என்னடி ஏய் நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

ஹே கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா
ஹே கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா
நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி
அச்சம் என்னடி நாணம் என்னடி
ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி



Credits
Writer(s): Deva, Vaalee, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link