Otti Vaaraney (From "80's Buildup")

ஒட்டி வாறேனே எட்டி போகாதே
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே
காட்டு காத்தா தான் சாச்சு போட்டாயே
பார்வை பார்த்தேதான் ஆசை சேத்தாயே

ஊத்து நீராதான் ஓடி போறாயே
தேடிப் பார்த்தே நான்
வாடிப் போறேனே

ஒட்டி வாறேனே எட்டி போகாதே
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே

சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற
மொறைச்சதும் நான் முழிக்கிறேண்டி
மனசுல நீ கணவத்தான் வெதைக்குற
எனக்கென நீ பொறந்தவடி
நெஞ்சுக்குள்ள ராணி போல
உன்ன வச்சு பார்த்தேனே
அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாலுற

ஒத்த சொல்ல நானும் கேக்க
மண்டி போட்டு ஏங்குறேன்
பச்ச புள்ள போல நீயும் பழிவாங்குற
சொச்ச வாழ்க நீயும் சேர
மிச்ச ஆயுள் மேலும் கூடும்
என்ன ஆழும் ராணி ஆச தேனீ நீதான்

ஊத்து நீராதான் ஓடி போறாயே
தேடிப் பார்த்தே நான்
வாடிப் போறேனே

ஒட்டி வாறேனே எட்டி போகாதே
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே
காட்டு காத்தா தான் சாச்சு போட்டாயே
பார்வை பார்த்தேதான் ஆசை சேத்தாயே

ஊத்து நீராதான் ஓடி போறாயே
தேடிப் பார்த்தே நான்
வாடிப் போறேனே

ஒட்டி வாறேனே எட்டி போகாதே
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே



Credits
Writer(s): Mohamaad Ghanesh Balaji, Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link