Kaadhoram (From "Kee")

காதோரம் மூச்சு காற்று ஒன்று ரீங்காரம் செய்யிதே
கண்ணோரம் சொப்பனங்கள் பூங்காற்றில் சேருதே
அலாதியான தோற்றம் அ மூக்கின்மேலே சீற்றம்
வினோதமாக என்னை மாற்றுதே
ஆகாதே கண்ணை கொள்ளை கொண்டு போகாதே
முன்பிளே
தாங்காதே உன்னை பார்க்கவேணும் வேண்டாமா
கண்களே

மீறாத எல்லை மீறி கூரான சொல்லை கூறி
நீராக உன்னை சேர பார்க்கிறேன்

புயல்மழையினில் சிறு இழையென
பதறி நகரும் இளமனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவடியெடுத்து மகிழ்ந்திடும்
ஒரு குடையினில் இருநடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகமிதிபடும்

நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கனவாகவா
நீ கூறும் வண்ணம் பெண்ணாகமாறவா
மாற்றத்தில் ஒன்று மடிசேரவா

கண்ணாடிமுன் நின்று நின்று என்னை கூர்ந்து பார்கின்டெர்ன்
நான் இல்லையே
என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேக்கிறேன் வெக்கப்பட்டு வேர்க்கிறேன்

புயல்மழையினில் சிறு இழையென
பதறி நகரும் இளமனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவடியெடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இருநடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகமிதிபடும்

வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரைசேருது
நீரூற்று ஒன்று நிதானமாகுது
தொல் மீது சாய்ந்து அணைபோடுது

எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
எங்கெங்கே வான் தேடுது
நீ இங்குதான் உள்ள செய்தி கண்டுகொண்டது
விட்டு விட்டு சென்றது

புயல்மழையினில் சிறு இழையென
பதறி நகரும் இளமனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவடியெடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இருநடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகமிதிபடும்



Credits
Writer(s): Vishal Chandrashekar, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link