Aalankaaya Aanjaneya (From "HanuMan") [Tamil]

ஆலங்காயா அஞ்சனையே பலம் கொண்டு வந்தாரு பாருங்கயா
ஆளு கொள்ளா மாமரத்த கொட்ட தான் வச்சாரு மாங்காயா
கேட்டுக்கையா கேட்டுக்கையா மந்தி அவதாரம் பாதுக்கயா
கத்தி இல்ல ஆனாலுமே காய சீவினாரு கூறாயா

அன்ஜனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட
அன்ஜனம்மாவின் கிட்ட கிட்ட மாங்கா குவியல கொட்ட கொட்ட
அத்தன மாங்காய எப்படி சொல்ல
அத்தன மாங்காய எப்படி சொல்ல
புளிப்பெல்லாம் துண்டாக்கி கை ரெண்டில் தந்தாரே

அஞ்சன மகனோட ஞானம்
ஆனா அத சொல்ல வார்த்த இல்ல
அஞ்சன புள்ள வீரம்
ஆனா அது போல ஊருல இல்ல

தேக்கி வச்ச கடலுக்குள்ள எப்போதும் நிக்காத அலைய கட்டி
சுத்தி வச்ச பால வச்சு கரை மேல உப்பா காய வச்சான்
பொத்தி வச்ச மொளகா தூள ஊறுகா மேல தான் தூவயில
கட்டழகி கண்ண காக்க காத்தோட போக்க மாத்தி வச்சான்

கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி
கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி
காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்
காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்
பக்கம் வராம காவலு செஞ்சானே

பக்குவமா பக்குவமா ஊறுகா செஞ்சி இறக்கி வச்சான்
கொத்த வரும் காக்கைகள தன்னோட சத்தில் ஓட வச்சான்
பத்திரமா பத்திரமா பூண்டு பள்ள எல்லாம் கூட்டி வச்சு
அம்மா சொன்ன அளவெடுத்து எண்ணெய நல்லா ஊத்தி வச்சான்

ஊறுகா போடும் பான மேல
ரங்கோலி போடும் வண்ணம் போல
ஊறுகா போடும் பான மேல
ரங்கோலி போடும் வண்ணம் போல
தேனான ஊறுகா கையில் எடுத்து
தேனான ஊறுகா கையில் எடுத்து
நேசிச்ச பொண்ணுக்கு அன்பாக தந்தானே

அஞ்சன மகனோட ஞானம்
ஆனா அத சொல்ல வார்த்த இல்ல
அஞ்சன புள்ள வீரம்
ஆனா அது போல ஊருல இல்ல



Credits
Writer(s): Anudeep Dev, Mohanrajan Mohanrajan
Lyrics powered by www.musixmatch.com

Link