Parisuthar Koottam

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே

ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம்
திருமுடி யணிந்திலங்கிடவும்
தேவசேயர்களா யெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே

சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே

Credits
Writer(s): Prakash Willams
Lyrics powered by www.musixmatch.com

Link