Aarivar Aararo (feat. Ishia John)

ஆ... ஆ... ஆ... ஆ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்

பாருருவாகுமுன்னே – இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ

தித்திக்குந் தீங்கனியோ – நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ

ஜீவனின் அப்பமோதான் – தாகம்
தீர்த்திடும் பானமோதான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ

ஆர் இவர் ஆராரோ



Credits
Writer(s): V Masilamani
Lyrics powered by www.musixmatch.com

Link