En Nadanam

தா தீம் தா
தக்க தா தீம் தா
தரிகிட தா தீம் தா
தத தரிகிட தீன்ன தா தீம் தா

என் நடனம் நளினம் பதம்
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்
என் பரதம் கலையின் சுகம்
இனி மூவுலகம் மயங்கிடும் விதம்

வெல்வது யார், யார், யார், யார்?
விரைவினில் பார், பார், பார், பார்
நாதகன் நான், நான், நான், நான்
வித்தகன் நான், நான், நான், நான்

சிவபதம் நான், நான், நான், நான்
ஆணவம் ஏன், ஏன், ஏன், ஏன்?
மடிவது யார், யார், யார், யார்?
முடிவினில் பார், பார், பார், பார்

என் நடனம் நளினம் பதம்
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்

கருவிலே பரதமே பயின்றவன் ஆட்டமே
மேனகை ஊர்வசி பரம்பரை ஆளுமே
விழியிலே விரலிலே அபிநயம் பாரடா
அசைவிலே அழகிலே அதிசயம் நானடா

போடா பதறிடும் மூடா
நடன மேடை உனக்கொரு கேடா
வாடா உலறுவதேன்டா
நடன மாடி இடுப்ஒடிப்பேன்டா

எதிரினில் நில், நில், நில், நில்
பயமில்லை சொல், சொல், சொல், சொல்
இவனொரு தீ, தீ, தீ, தீ
அணைவது நீ, நீ, நீ, நீ

அரும்பொருள் நான், நான், நான், நான்
துரும்பென நீ, நீ, நீ, நீ
வரம்பெற நான், நான், நான், நான்
வதைபட நீ, நீ, நீ, நீ

பேர் புகழும் பொருளும் வரும்
இனி என் நடனம் விருதுகள் பெறும்
என் உயிரும் உடலும் கலை
இனி என் நிழலும் வென்றிடும் உனை

தகதிமி ஜல், ஜல், ஜல், ஜல்
சரி, சரி செல், செல், செல், செல்
ஆண்மையில் நான், நான், நான், நான்
தலைகணம் ஏன், ஏன், ஏன், ஏன்?

அலைகடல் நான், நான், நான், நான்
அலைவது நீ, நீ, நீ, நீ
மழைமுகில் நான், நான், நான், நான்
விழுவது நீ, நீ, நீ, நீ

தக தகின தக தகின தக தகின தக தோம்
தக தகின தக தகின தக தகின தக தோம்
சக சகம தா தா தா கம கமதா னி னி னி
தக தகின ச ச க க க க ம ம ம ம தா தா த த ரி ரி
க க ம ம ம ம கா க த த ரி ரி க க கா க த த ரி ரி த த ரி ச க
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எக எகன எக எகன எக எகன எக எகன
பக பகன பக பகன பக பகன பக பகன
ரக ரகன ரக ரகன ரக ரகன ரக ரகன
தக தகன தக தகன தக தகன தக தகன தா



Credits
Writer(s): N. Kannan, Thiyaru Thiyagu
Lyrics powered by www.musixmatch.com

Link