Aaga Moththa Sandhosame (From "Babu (No.1 Bullshit Guy)")(Tamil)

ஆக மொத்த சந்தோசமே அடங்காது ஆகாசமே
சாமானியன் சந்தோசமே சாமி கூட கொண்டாடுமே
ரா ரோ ரா ரோ ஹே ரா ரோ ஹே ரா ரோ
ஆக மொத்த சந்தோசமே அடங்காது ஆகாசமே
ரா ரோ ஹே ரா ரோ

வயித்துல சூடு இல்ல கண்ணுக்குள்ள கண்ணீரில்ல
காலத்துக்கும் கலையாத கனவு நாமளே
கூட்டாஞ்சோறு சொந்தமிது கூடிப்பேசும் பந்தமிது
நம்மளுக்கும் பூமியில வாழ்க்க இருக்குதே
புது வாழ்க்கையே சிரமம் மறந்து சிரிக்க கெடச்ச வாழ்க்கையே

ஆக மொத்த சந்தோசமே அடங்காது ஆகாசமே
சாமானியன் சந்தோசமே சாமி கூட கொண்டாடுமே
ரா ரோ ரா ரோ ஹே ரா ரோ ஹே ரா ரோ ஏ

நீந்தி துள்ளும் செம்மீனா ரெக்க வீசும் மைனாவா
அளவில்லா சுகமே அட இந்த தருணமே
சின்ன சின்ன மனசுகளே காணும் வண்ண ஆசைகளே
ஆவியாகிப் பறந்து அந்த நிலாவாகுதே
அட கவலையே மறந்து பறந்து திசையின் வெளிச்சம் போலவே ஓஒ

ஆக மொத்த சந்தோசமே அடங்காது ஆகாசமே
சாமானியன் சந்தோசமே சாமி கூட கொண்டாடுமே
ரா ரோ ரா ரோ நம் பாசமே பூ வாசமே



Credits
Writer(s): Pavan, Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link