Kadandhu Po Nenjame

ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்
ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்

தனிமை ஊஞ்சலில் தாலாட்டுதே
தனியாய் வாஞ்சையில் பூ பூக்குதே
கேளாத வேணுகானமோ என் மௌனமே
வாழாத மாய காலமோ இந்நேரமே

நேற்றின் சேற்றில் தேங்காமல்
நாளை தேனில் மூழ்காமல்
இன்றின் மீது நின்றேனே
இன்பம் உண்டு கண்டேனே

பாரம் இல்லை இந்நேரம்
நீரும் இல்லை கண்ணோரம்
நாளும் நீங்கி சென்றோடும்
இதுவே போதும் எப்போதும்
ஒஒஒஒஒஒ-ஒஒஒஒஒஒ
ஒஒஒஒஒஒ-ஒஒஒஒஒஒ

யாரோடும் பேசாத நாளொன்றினில்
என்னோடு நான் பேச வாய்கின்றதே
நான் பேச நான் பேச நான் கேட்பதே
நீங்காத ஞானத்தில் சேர்கின்றதே

கண்ணீரை தாண்டாத வான் ஒன்றிலே
ஏதொன்றும் இல்லாமல் போகின்றதே
தண்ணீரில் வாழ்கின்ற கடிகாரங்கள்
நேரங்கள் காட்டாமல் மாய்கின்றதே
தனிமை பிழையை காட்டி போனதே
தனிமை பொன் ஒளியை காட்டுதே

பாரம் இல்லை இந்நேரம்
நீரும் இல்லை கண்ணோரம்
நாளும் நீங்கி சென்றோடும்
இதுவே போதும் எப்போதும்
போதுமே போதுமே போதுமே

ஓ கடந்து போ நெஞ்சமே
ஓ கடந்து போ நெஞ்சமே



Credits
Writer(s): Joe Costa, Karthik Netha
Lyrics powered by www.musixmatch.com

Link