Maraththa Vechchavan

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான்
வாழ்வ மாத்துவான்

ஏ மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்

ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான்
வாழ்வ மாத்துவான்

படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணை எதற்கு?
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு?
படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணை எதற்கு?
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு?

உன்னை நல்ல ஆளாக்க
உத்தமனை போலாக்க
எண்ணியவன் யாரென்று
கண்டுக்கொள்ள யாருண்டு?
ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்

ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான்
வாழ்வ மாத்துவான்

உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்!
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவுதர நீ படிப்பாய்!
உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்!
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவுதர நீ படிப்பாய்!

புத்தியுள்ள உனக்கெல்லாம்
புத்தகத்து படிப்பென்ன?
சக்தியுள்ள உனக்கெல்லாம்
சத்தியத்தில் தவிப்பென்ன?
காத்து இருப்பது எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு?

ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான்
வாழ்வ மாத்துவான்

ஏ மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவன
அவனே சுமப்பான்

ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link