Naa Autokaran Autokaran

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
எளியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அட அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்

ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு

ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஹா... ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு
பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்தில
இருக்கோம் சாலைகளின் ஓரத்தில

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
ஹா... அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாமுள்ள ரேட்டுக் காரன்

ஆ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஏ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா
உன் பிள்ளைக்கொரு பேரு வச்சும் தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா
உன் பிள்ளைக்கொரு பேரு வச்சும் தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
Address இல்லாத் தெருவும்
இந்த ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
எளியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்

(அஜக்கு) அஜக்கு இன்னா அஜக்கு தான்
(குமுக்கு) குமுக்கு இன்னா குமுக்கு தான்

(அஜக்கு)அஜக்கு குமுக்கு
(குமுக்கு)அஜக்கு குமுக்கு



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link