Theninimaiyilum

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே

காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே
காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே
பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீமனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம்
பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம்
பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி நீ மனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்
காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே



Credits
Writer(s): Bro.richard Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link