Poonthalir Aada (From "Paneer Pushpangal")

பூந்தளிர் ஆட
ஆஆஆஆஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆஆஆஆஆ

பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்

பூந்தளிர் ஆட
ஆஆஆஆஆஆஆஆ
பொன்மலர் சூட
ஆஆஆஆஆஆஆஆ
லலலலலலல-லலலலலலல
காதலை ஏற்றும்
காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும்
காதில் பட்டதே

வாலிப நாளில்
வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில்
எண்ணம் சுட்டதே

கோடிகள் ஆசை
கூடிய போது
கூடும் நெஞ்சிலே
கோலம் இட்டதே
தேடிடுதே
பெண் காற்றின் ராகம்

பூந்தளிர் ஆட
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ
பொன்மலர் சூட
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ
ம் ம் ம் ம் ம்-ம் ம் ம் ம் ம்
பூமலர் தூவும்
பூ மரம் நாளும்
போதை கொண்டு பூமி தன்னை
பூஜை செய்யுதே (ஆஆ)

பூ விரலாலும்
பொன் இதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும்
இன்பம் செய்யுதே

பூமழை தூவும்
வெண்நிற மேகம்
பொன்னை அள்ளுதே
வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ
பொன்மலர் சூட
ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ

சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்



Credits
Writer(s): Ilaiya Raaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link