Marangal Tharum

மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்
மலைகள் கடல் அலைகள்
எந்த நிறங்கள் அதை அறியோம்

பனியும் அதன் குளிரும்
உடல் உணர்வில் நாம் அறிவோம்
ஊற்றும் மழை நீரும்
தரும் காற்றும் நாம் அறிவோம்

முகத்தின் விழி இரண்டும் இன்றி
அகத்தின் விழி கொண்டோம்
முதல்வன் தந்த உலகை
இங்கு அதனால் என்றும் காண்போம்

மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்

அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்
அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்

ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை
ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை

அருளாய் உண்மைப் பொருளாய்
நிற்கும் இறைவன் அடி போற்றி
உருவே இன்றி அருவாய்
நித்த ஒருவன் அடி போற்றி

முதலும் ஒரு முடிவும் அற்ற
தலைவன் அடி போற்றி
கருணை நல்ல இரக்கம் கொண்ட
கடவுள் அடி போற்றி



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link