Kai Veesamma

கை வீசம்மா
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா
மூடப் பழக்கத்த நீயும் கை வீசு

பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா

கை வீசம்மா
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா
மூடப் பழக்கத நீயும் கை வீசு

அழகப் பாத்து ஆசைக் கொண்டு
அருகில் வந்து பேசுவான்
பொன்னு மணியும் நீதானென்று
பொய்யை அள்ளி வீசுவான்

மாலை போட வேண்டினால்
காத தூரம் ஓடுவான்
தாயார் தந்தை மீதிலே
பழியை தூக்கி போடுவான்

அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்

அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்
பணங்காசை கொடுத்து வாங்கும் வாழ்க்கை
வியாபாரம்தான் போடி போ

கை வீசம்மா
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா
மூடப் பழக்கத்த நீயும் கை வீசு

வந்து வந்து பார்த்து போன
மாப்பிள்ளைகள் எத்தனையோ
நொந்து நொந்து மாய்ந்து போன
கன்னிப் பெண்கள் எத்தனையோ

மாலை கொண்ட போதிலும்
வாடும் பெண்கள் கோடிதான்
மாமியின் கொடுமை தாங்காமல்
தாயின் வீட்டை தேடித்தான்

ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்

ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்
அட பணத்தால் சேர்ந்து பணத்தால் பிரியும்
சந்தைதான் இந்த உலகம்தான்

கை வீசம்மா
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா
மூடப் பழக்கத்த நீயும் கை வீசு

பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா

கை வீசம்மா
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா
மூடப் பழக்கத்த நீயும் கை வீசு



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link