Rukkumani Rukkumani (From "Roja")

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆச ரொம்ப இருக்கு
சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு
எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க
முத்து மணி கொலுசுங்க முத்தம் வச்சி சிணுங்க
உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது
ஆச பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருசன் சுண்டுவிரல் புடிக்க
சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க
காமதேவன் மண்டபத்தில் கச்சேறியும் நடக்க
கண்ணிமகள் வளையலும் பின்னணிகள் இசைக்க
முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது
சித்தம் சூடேருது இந்த ஜென்மம் ஈடேருது
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link