Penn Maaney Sangeetham (From "Naan Sigappu Manithan")

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா அஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ

பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்ம்ம்

பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே ஏ
உன் மானே சங்கீதம் பாடவா

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும்
தேதியை தேடுவேன்
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வராதோ

பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
உல்லாசம் ஆயிரம்
ம்ம்உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்ம்ம்

பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா



Credits
Writer(s): Ilaiyaraaja, Mohamed Methar M
Lyrics powered by www.musixmatch.com

Link