Sondhangale (From "Aduthathu Albert")

சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்
சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்

இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே

சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்

நாள் குறிக்க தீ வளர்க்க
பூ முடிக்க கிளிகள் நினைக்க
நாள் வந்தது தீ வந்தது
பூ வந்தது எதுவோ நடக்க

வாங்கி வந்த மாலை
மலர் வளையம் ஆகும் வேளை
ஜாதியும் ஜாதகம்
ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ

சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்

அஹஆஆஆஆஆஆ
அஹஆஆஆஆஆஆ

தாம் சுமந்த தோள் இரண்டில்
தேர் சுமந்தான் இசையை மறந்தான்
தாய் ஒருநாள் பால் கொடுத்தாள்
ஏன் அவளே பாலைத் தெளித்தாள்

பாவி போன பின்பு இங்கு அழுது பார்க்கும் அன்பு
சோகமே ஆறுமா
சோகமே ஆறுமா நாளாகுமா

சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே

சொந்தங்களே சுற்றங்களே
சோகம் என்ன சொல்லுங்களேன்



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link