Naan Epoudhu

என் இதயம் கண்களில் வந்து
இமையை துடித்தது ஏனோ

நான் எப்போது...
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றாள் அப்போதா

என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை பாய்ந்ததே அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்கச் சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா

என் விழிகளை மெதுவாய் திறக்கச் சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்



Credits
Writer(s): A R Rahman, Balakrishnan Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link