Paathagathi Kannupattu (From "Kazhugoo")

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு

பட்ட மரம் ஒன்னு
பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் போது
என் மனசு வழுக்குதே

உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

மனசு முழுக்க ஆசை
என்னடி நானும் பேச
நாக்கு குள்ள கூச
தடுமாறிப் போனேன்

காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான்
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான்

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

அழுக்கா கெடந்த மனச
நீ எறங்கி அலச
மறந்து நிக்கிறேன் பழச
புரியாம தானே

ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்
அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தன
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு

பட்ட மரம் ஒன்னு
பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் போது
என் மனசு வழுக்குதே

உன்கிட்ட கெஞ்ச என்னடி செஞ்ச
என்னோட நெஞ்ச சொல்லு
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு



Credits
Writer(s): Yuvanshankar Raja, Snegan
Lyrics powered by www.musixmatch.com

Link