En Kannan (From "Bala")

என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டுக்கொள்ள
ஒரு செயற்கை கண்ணைப் பொறுத்திவிடு
யானை தடவும் குருடன் கதைப் போல
ஹைய்யோ ஹைய்யோ
தடவித் தடவி உன்னை பார்ப்பேனே
ஹையய்யய்யய்யே

சிற்பம் போல இந்த உடல் நான்
தொட்டுப் பார்த்ததும் குழைகிறதே
எங்கே எங்கே உந்தன் இடை
தொட்டுப் பார்த்தும் கூட அது கடைக்கலையே

ஹோ கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய் வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னால் படுத்து
மறியல் பண்ணுதே...
கூந்தல் சாட்டையை சுழற்றுகிறாய்
கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய்
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோன்றுதே

அழகின் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே பெண்ணே உந்தன் காதலாலே
வா வா வா வந்து தீண்டிவிடு

என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே

காதல் என்பது வன்முறையா
கண்கள் தான் அதன் செய்முறையா
கண்கள் ரெண்டும் உரசும் போது இதயம் எறியுதே
பெண்மை என்பது எறிமலையா
பூவில் சிந்திடும் பனிமலையா
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வளையுதே

மனம் ஒன்று பொம்மை ஆனதே பெண்ணே உன்னாலே
கொஞ்சிக் கொஞ்சி தலையை ஆட்டுதே
உன்னைக் கண்டு ஆசையாலே
வா வா வா வந்து விளையாடு

என் கண்ணை பிடுங்கிக்கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டுக்கொள்ள
ஒரு செயற்கை கண்ணைப் பொறுத்திவிடு
யானை தடவும் குருடன் கதைப் போல
ஹைய்யோ ஹைய்யோ
தடவித் தடவி உன்னை பார்ப்பேனே
ஹையய்யய்யய்யே

(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ-ஓ)



Credits
Writer(s): Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link