Kaatrukullai

காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான்
மாறாதேஏ... மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதேஏ... கண்ணோடு என்றுமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல்
என்னை போல்
நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதேஏ உயிர் சுகம் தேடுதே
நடு காட்டில்தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதேஏ உயிர் சுகம் தேடுதே
இளம் வெய்யில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளம் வெய்யில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து

சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதேஏ
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதேஏ
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதேஏ... தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதேஏ... நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே!



Credits
Writer(s): Raja, Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link