Kaadhal Mattum (From "Kadhal Kondaen")

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ
இவனை இவனை தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்கு தானே பேசுகிறான்

காதல் மட்டும் புரிவதல்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை
பார்தேனே வானவில்லை

என் நெஞ்சோடு ரசித்தேன்
கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம்
குழைத்து வரைந்தேன் அவளை

காதல் மட்டும் புரிவதல்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்

என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்பதில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ
இவனை இவனை தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்கு தானே பேசுகிறான்

காதல் மட்டும் புரிவதல்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை



Credits
Writer(s): Palaniappan Bharathi, Raja Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link