Neela Vaanam (From "Manmadan Ambu")

நீல வானம்
நீயும் நானும்
கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

நீல வானம்
நீயும் நானும்

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது

என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி

நீல வானம்
நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை
மாலாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி

உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

நீல வானம்
நீயும் நானும்



Credits
Writer(s): Kamal Haasan, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link