Poonkatrey

Friends, வாழ்க்கையில நல்லதும் வரும், கெட்டதும் வரும் அது சகஜம் தான்
அதுக்காக உண்மைய மட்டும் மறைக்க கூடாது
உண்மைய சொல்றதுனால எந்த பிரச்சன வந்தாலும்
அத தாங்கிகிற சக்தி கடவுள் நிச்சயமா நமக்கு கொடுப்பாரு

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

மேகங்கள் கலையலாம், வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம், உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்தே

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

அலைகளாய் ஆடுதே அன்பெனும் உள்ளங்களே
அனலிலே உருகுதே மெழுகுபோல் சொந்தங்களே
பாடிடும் குயில்தோப்பில் யார் அம்பு எய்தார்
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்
காலமே உன் லீலையே இனி மாறுமோ

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்
ஓவியம் உருவாகுமோ சுவரின்றியே

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்தே

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா



Credits
Writer(s): Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link