Paal Pappaali

பால் பப்பாளி வெள்ளத் தக்காளி
ஒன் கூட்டாளி என்ன சமாளி
பால் பப்பாளி வெள்ளத் தக்காளி நான் கோமாளி
இப்போ ஜோக்காளி

ஒன் முந்தானைய முண்டாசாக கட்டிக் கொள்ளவா
நான் மூணு வேள முத்தச் சோறு அள்ளித் தின்னவா
நீ புள்ளி வச்ச மானு தானே கோலம் போடவா
ஒன் மீசையால காது குத்தி கூச்சங் காட்டவா

பால் பப்பாளி வெள்ளத் தக்காளி
ஒன் கூட்டாளி என்ன சமாளி
பால் பப்பாளி வெள்ளத் தக்காளி
நீ கோமாளி போடா ஜோக்காளி

என் முந்தானைய முண்டாசா கட்டிக் கொள்ளாதே
நீ மூணுவேள முத்தச் சோறு அள்ளித் தின்னாதே
ஏ புள்ளி வச்ச மானு மேல கோலம் போடாதே
ஒன் மீசையால காது குத்தி கூச்சங் காட்டாதே

கன்னக் குழி வழியே தொண்டக் குழி நொழஞ்சு
நெஞ்சுக் குழி நடுவே மையங் கொள்ளாதே
ஏ அச்சு வெல்ல அழகே உச்சி வெயில் நிலவே
வச்சு வச்சு என்ன ஈரஞ் செய்யாதே
என்னை மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த ஊரான் பெத்த பொண்ணப் பாத்து உச்சுக் கொட்டாதே

என்ன பூவுக் குள்ள தேனப் போல பூட்டி வைக்காதே
நம்ம ஆத்தா கோவில்
யானையப் போல் ஆட்டி வைக்காதே
காதலா காதலா ஓடி வரவா
யாருமில்லா நேரம் பாத்து தேடி வரவா
வானிலா தேனிலா கூடி வரவா
ஆடி மாச காத்துப் போல ஆடி வரவா

பால் பப்பாளி வெள்ளத்தக்காளி
ஒன் கூட்டாளி என்ன சமாளி
பால் பப்பாளி வெள்ளத்தக்காளி
ஒன் கூட்டாளி என்ன சமாளி

ஒன் முந்தானைய முண்டாசாக கட்டிக் கொள்ளவா
நான் மூணு வேள முத்தச் சோறு அள்ளித் தின்னவா
ஏ புள்ளி வச்ச மானு மேல கோலம் போடாதே
ஒன் மீசையால காது குத்தி கூச்சங் காட்டாதே
ஒத்தையில குதிச்சேன்
மெத்தையில தவிச்சேன்
கத்தரிக்கோல் விழியால கண்ணு வெட்டாதே
ஒத்தையில இருந்தேன்
சுத்தி சுத்தி பறந்தேன்
சீட்டெடுக்கும் கிளியாய்
பூட்டி வைக்காதே

ஒரு முட்டாய் கடைய மொறச்சுப் பார்க்கும்
பட்டிக் காட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பாத்து ஏங்க வைக்காதே
ஒன் ஆடுபுலி ஆட்ட மெல்லாம் இங்கே வேணாயா
நான் கூடுவிட்டு கூடு பாயும் பொண்ணு தானையா

கோகிலா கோகிலா கோடை வெயிலா
கால காலமாக வாழும் காமன் மகளா
கோவலா கோவலா காதல் நகலா
ஓரக் கண்ணால் பாத்த வேள பட்ட பகலா

பால் பப்பாளி வெள்ளத் தக்காளி
ஒன் கூட்டாளி என்ன சமாளி
பால் பப்பாளி வெள்ளத் தக்காளி
நீ கோமாளி போடா ஜோக்காளி

ஒன் முந்தானைய முண்டாசாக கட்டிக் கொள்ளவா
நான் மூணு வேள முத்தச் சோறு அள்ளித் தின்னவா
ஏ புள்ளி வச்ச மானு மேல கோலம் போடாதே
ஒன் மீசையால காது குத்தி கூச்சங் காட்டாதே



Credits
Writer(s): Kabilan, Harris Jayaraj J
Lyrics powered by www.musixmatch.com

Link