Oru Vetkam Varudhe

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம்
பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும்

காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே
வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே



Credits
Writer(s): James Vasanthan, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link