En Kadhal Neethane

என் காதல் நீதானே
என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும்
அந்த உயிரும் நீ தானே

என் காதல் நீதானே
என் கடவுளும் நீதானே
என் கருவில் நான் சுமக்கும்
அந்த உயிரும் நீ தானே

யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ

எனக்குள் நானே தேடிப் பார்த்தேன்
உனக்குள் என்னை தேடிப் பார்த்தேன்
எனக்குள் உன்னை தேடும் போதே
உன்னை நானும் பார்த்தேன்

தனிமை விரும்பி வாழ்ந்து பார்த்தேன்
உந்தன் பெயரை மறந்து பார்த்தேன்
உன்னை மறக்கும் போதே நானே
எந்தன் உயிரை மறந்தேன்

எனது வாழ்க்கை நீ தான் என்று
அந்த நிமிடம் அறிந்தேன்
என்னுள்ளே நீ வந்த போதும்
ஒரு சொர்க்கம் நான் கண்டது
எனைத்தள்ளி நீ சென்ற போது
என் உயிரை யார் கொன்றது உயிரே உயிரே

என் காதல் நீதானே நீதானே
என் கடவுளும் நீதானே நீதானே
என் கருவில் நான் சுமக்கும் ஓ...
அந்த உயிரும் நீ தானே
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ

உன்னோடு பழக வைத்தாய்
விளையாடி சிரிக்க வைத்தாய்
வித்தைகள் செய்கிறாய்
நீ காற்றை போல வீசினாய்
என் சுவாசம் போல மாறினாய்

எனது கண்கள் இமைகள் ஓரம்
தினமும் நீ வர தூங்க வைப்பேன்
உனது தூக்கம் கலையாமல்
நானும் விழித்து கிடப்பேன்

உனது காதில் பொய்கள் சொல்லி
தினமும் உன்னை சிரிக்க வைப்பேன்
அந்த பொய்யில் மீண்டும் சிரித்தால்
பொய்கள் சொல்லி கிடப்பேன்

அந்த பொய்யே லட்சியம் என்று
நானும் வாழ்ந்தே கிடப்பேன்
என் முன்னே விளையாடும் போது
உனை தள்ளி நான் வீழ்ந்தது
உன் முன்னே விழும் போது கண்ணே
வலியென்று என்று யார் சொன்னது உயிரே உயிரே

என் காதல் நீதானே நீதானே
என் கடவுளும் நீதானே நீதானே
என் கருவில் நான் சுமக்கும்
அந்த உயிரும் நீ தானே

யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ
யாரோ நீ யாரோ



Credits
Writer(s): A.j. Daniel, P.v. Prasath
Lyrics powered by www.musixmatch.com

Link