Adi Unnale

காற்றோடு வீசும்
மழைப் போல் வந்தாளே
என் கண் கொண்டு பேசும்
மௌனம் தந்தாளே
தேவதையின் வம்சம் இவளா ஹா
பேரழகின் அம்சம் இவளோ?

அடி உன்னாலே
என் இதயம் என்னைக் கொல்லுதடி
உன்னைக் கண்டாலே
என் நிழலும் உன்னைத் தொடருதடி
இவை எல்லாமே உன்
பார்வைகள் செய்த லீலையடி

ஹா ஹா ஹோ ஹோ ஹோ
யாரோடு பேசும் போதும்
உன் கொலுசின் ஓசைக் கேட்கும்
தீராத போதை தந்தாயே, நெஞ்சில்
நேராகப் போகும் பாதை
உன் வீட்டைத் திரும்பி பார்க்கும்
ஏன் இந்த மாயம் செய்தாயோ, அன்பே
காதல் மழையாய் பொழிகிறதே
என் நெஞ்சில், கவிதை புயலாய் வீசியதே

அடி உன்னாலே
என் இதயம் என்னைக் கொல்லுதடி
உன்னைக் கண்டாலே
என் நிழலும் உன்னைத் தொடருதடி

காணாத கண்கள் கூட
உனைக் கண்டு கண்ணிமைக்கும்
தானாக கால்கள் உன் பக்கம் வருதே ஹே
விடியாத காலைப் போல
விடிந்தாலும் இரவைப் போல
புரியாத மாற்றம் தந்தாயே, அன்பே
ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் நெஞ்சில் ஒரு கோடி மின்னல் தோன்றுமடி

அடி உன்னாலே
என் இதயம் என்னைக் கொல்லுதடி
உன்னைக் கண்டாலே
என் நிழலும் உன்னைத் தொடருதடி



Credits
Writer(s): Britto, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link