Kaatrukk Enna Veli

காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது
விலங்குகள் ஏது

காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது
விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன்
ஆடல் ஒன்று
நான் வானிலே மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன்
ஆடல் ஒன்று

கன்று குட்டி துள்ளும் போது
காலில் என்ன கட்டு பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு

காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது
விலங்குகள் ஏது

தேர் கொண்டு வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை கொண்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்
பேசி பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றம் என்ன ஏற்று கொள்வேன்

காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது
விலங்குகள் ஏது



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link