Yethukkaaga Enna Neeyum

எதுக்காக என்ன நீயும் பாத்த
இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து நீயும் ஊத்த
எத சொல்லுறது இல்ல இல்ல வார்த்த
நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல ஆவல
சொல்லும் முன்ன நான் அறிவேன் காதல
பள்ளிக்கொண்டு போற
நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல

எதுக்காக... எதுக்காக...

அஞ்சநெத்தி போல திரிஞ்சேனே
உன்ன கண்டபின் செம்பருத்தி ஆனேன் நானே
வட்டக்கல்ல போல கிடந்தேனே
உன சொன்னப்பின்ன கிட்டிப்புள்ள ஆனேன் தானே
கோடு போலத்தான் வாழ்ந்தவ கோலம் ஆகி போனேன்
மோளமாடு போல் போனவன் கோயில் காள ஆனேன்
கத்தாழ உன்னால கொத்தோடு மலர்ந்தேன்

எதுக்காக என்ன நீயும் பாத்த
இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து நீயும் ஊத்த
எத சொல்லுறது இல்ல இல்ல வார்த்த

தன தனன்னா தன னன்னா னன்னா
கட்டுக்கம்பி கூட சணல் ஆகும்
உன கண்ட பின்ன வத்திக்குச்சி தீபம் ஆகும்
உப்பு தண்ணி கூட ருசியாகும்
உன சொன்ன பின்னே கன்னுகுட்டி சிங்கமாகும்
போற போக்குல நீயன பூட்டு ஏன்டி போட்ட
சாவி கேட்குற சாக்குல தாண்ட வேண்டும் கோட்ட
கல்யாணம் கட்டாம கூடாது மிரட்ட
எதுக்காக என்ன நீயும் பாத்த

இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து நீயும் ஊத்த
எத சொல்லுறது இல்ல இல்ல வார்த்த
நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல ஆவல
சொல்லும் முன்ன நான் அறிவேன் காதல
பள்ளிக்கொண்டு போற
நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link