Kairegai Polathan Kadhal

பாடகி: மதுஸ்ரீ

பாடகர்: ஹரிச்சரண்

இசையமைப்பாளர்:எக்ஸ். பால்ராஜ்

பெண்: கைரேகை
போலத்தான் காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்

ஆண்: கண் இமை
போலத்தான் காதல்
என்றும் விலகாதே
அன்பே நம் கண்ணில்

பெண்: மெழுகாகவே
நெஞ்சம் நெஞ்சம்
ஆண்: மெதுவாகவே
உருகும் கொஞ்சம் சில
சொல்லாத சோகங்கள்
சுகமாகும் இதமாகும்

பெண்: ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா

ஆண்: எந்த பறவை
என்னை கடந்து போகும்
பொழுதும் உன்னை
நினைத்தேன்

ஆண்: எங்கோ இருந்து
நீயும் என்னை நினைப்பாய்
என்றே நிதமும் நினைத்தேன்

பெண்: ஏதோ பாரம்
இதயம் சுமந்தாள் உன்
நெஞ்சில் சாய்ந்து
அழவே நினைத்தேன்

பெண்: நினைவெல்லாம்
நினைவெல்லாம் நிஜமாக
நினைத்தேன்

பெண்: உனக்காக ஒரு
நாளில் உயிர் தரவும்
நினைத்தேன்

பெண்: ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா

ஆண்: கைரேகை
போலத்தான் காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்

பெண்: உந்தன் கண்கள்
கலங்கும் நொடியில்
காற்றின் விரலாய்
கண்ணீர் துடைப்பேன்

பெண்: உன்னை எழுதும்
கவிதை அதிலே கடைசி
வார்த்தை நானாய் இருப்பேன்

ஆண்: உன்னை சுற்றி
கனவாய் வருவேன் நீ
வேண்டாம் என்றால்
கலைந்தே விடுவேன்

பெண்: பிரிந்தாலும்
உன் நினைவை
பிரியாமல் இருப்பேன்

ஆண்: இறந்தாலும்
உனக்கென்றும்
தெரியாமல் இறப்பேன்

பெண்: ஆஆ ஹா ஆஆஆ
ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா
ஹா

பெண்: கைரேகை
போலத்தான் காதல்
என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்

ஆண்: கண் இமை
போலத்தான் காதல்
என்றும் விலகாதே
அன்பே நம் கண்ணில்

பெண்: மெழுகாகவே
நெஞ்சம் நெஞ்சம்
ஆண்: மெதுவாகவே
உருகும் கொஞ்சம்
ஆண் & பெண்: சில
சொல்லாத சோகங்கள்
சுகமாகும் இதமாகும்



Credits
Writer(s): Pa. Vijay, X. Paulraj
Lyrics powered by www.musixmatch.com

Link