Siragadikkum Nilavu

சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமாமா
சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமா-சிக்குமா
சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமாமா
சிக்கு-சிக்கு-மாமா, சிக்குமா-சிக்குமா

சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

இருவருக்கும் மட்டும்
வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும்
காதல் எனும் சாமி

என் வீட்டில் எல்லா புறமும்
உன் வாசம் ஏன் தந்தாய்
என் வீட்டில் எல்லா புறமும்
உன் வாசம் ஏன் தந்தாய்
சில நேரம் யாரைக் கேட்டு
எனக்குள்ளே நீ சென்றாய்

என் கால்கள் தனியாக
உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சம் துணியாக
உன் வழியில் கிடக்கிறதே

சூரியனை தின்ற
மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில்
சுமந்தவனும் நீ தான்

சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

ஆகாயம் தாண்டிட நெஞ்சம்
இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம்
இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள் கூட
நீ செய்ய பிடிக்கிறதே

அறியாத குழந்தை போல
என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று
அடம் பிடித்து கேட்கிறதே

பட்டியலை எழுது
தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை
நீ ஒருவன் தானே

சிறகடிக்கும் நிலவு
கரம் பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை
தந்துவிட்டேன் என்னை

புன்னகைகள் சிந்தும்
பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும்
பேரழகன் நீதான்



Credits
Writer(s): Mani Sarma, Snekan
Lyrics powered by www.musixmatch.com

Link