Adi Aathi

ஏ...
ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி
ஓடி வர சொல்லும் உன் பார்வை
துரு துரு துருவென பாத்தாலே
தூண்டில மனசுக்குள் போட்டாலே
இதயத்தில் சுவர்களில் அழகாக
அவளது ஓவியம் வரைந்தாலே
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாத்தாலே ராசாத்தி
அடியாத்தி அடியாத்தி
ஒரு பார்வை நெய்யூத்தி
உயிர் மேல விளக்கேத்தி
போரானே எனமாத்தி
அடியாத்தி அடியாத்தி
பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்
வாசம் அடிப்பதென்ன வானவில்லே
ஆசைகள் தான் கூத்தாடுது
நெஞ்சமெல்லாம் பூத்தாடுது
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாத்தாலே ராசாத்தி
அடியாத்தி அடியாத்தி
கதவிடுக்குள விரலாக அவள் விழியால
உயிர் நசுங்கியதே
பகல் இரவென தெரியாமல்
இது புரியாமல் தினம் நகர்கிறதே
நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே
படித்துறை பாசியில் நடப்பது போல்
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே
ஓ...
ஏழேழு ஜென்மங்கள்
பேராசை வேண்டாமே
உயிர் தேடும் பெண்ணின் மடியில்
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்
சொல்லாமலே நெஞ்சாடுதே
உன் மோகனம் கண் தேடுதே
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாத்தாலே ராசாத்தி
அடியாத்தி அடியாத்தி
ஓ...
இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க
மனம் அலைபாயும்
தினம் பலமுறை குளிச்சாலும்
உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்
ஒரு விதை விழுந்து வனமாகும்
அதிசயம் நேரில் பார்த்தேனே
ஒரு துளி விழுந்து கடல் ஆகும்
உற்சவம் நானும் கண்டேனே
ஏ...
வரவேற்பு வளையம் போல்
புருவங்கள் அழைக்கிறதே
வரவேற்று எந்தன் நெஞ்சை வதைகள் தினமும் செய்கிறதே
கண்ணால் ஒரு காய்ச்சல் வரும்
முச்சந்தியில் மோட்சம் வரும்
ஏமாத்தி ஏமாத்தி
இவளால விழி சாத்தி
பாத்தாலே ராசாத்தி
அடியாத்தி அடியாத்தி
ஒரு பார்வை நெய்யூத்தி
உயிர் மேல விளக்கேத்தி
போரானே எனமாத்தி
அடியாத்தி அடியாத்தி



Credits
Writer(s): Viveka, F.s. Faizal
Lyrics powered by www.musixmatch.com

Link