Kattilukku

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவக் கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவ கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை
மாட்டி வைக்கும் எப்பொழுதும் வம்புல
அதை மாத்திவிட யாருக்குமே தெம்பில

கானகத்திலே சீதைக்குத் தான்
கோடு கிழிச்சான் ஒரு காலத்திலே
மூணு முடிச்சால் துன்பம் எனும் கோட்டை விட்டு
தாண்டாமல் தாங்கும் பெண் ஜென்மம்

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவக் கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை
மாட்டி வைக்கும் எப்பொழுதும் வம்புல
அதை மாத்திவிட யாருக்குமே தெம்பில

ஸ்ரீவாணியக் கும்பிடும், காசுக்கு ஸ்ரீதேவியக் கும்பிடும்
காமாட்சியக் கும்பிடும், பேருக்கு
பெண் தெய்வத்தை போற்றிடும்
பெண் தெய்வத்தை, கும்பிடிற ஆணுக்கு
வீட்டுக்குள் பெண் இல்லையா?
அம்மாவைப் போல், பெண்டாட்டி பெண்
என்று காணத்தான் கண் இல்லையா?
பாடுறதும் பேசுறதும் பெண்களப் பத்தி
பாக்கப் போனா என்ன ஒசத்தி?
கங்கையத் தான் அன்னை என்று கைகள் வணங்கி
மங்கையரை பங்கம் இன்று செய்தார்களே

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவக் கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை
மாட்டி வைக்கும் எப்பொழுதும் வம்புல
அதை மாத்திவிட யாருக்குமே தெம்பில

குரு பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வரா
குரு சாக்ஷாத் பரபிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா (ஸ்ரீ குருவே நமஹா)

பெண்டாட்டி கர்ப்பம் ஆனா
உள்ளது பெண்ணான்னு ஏன் பாக்குது?
பஞ்சாங்கம் தான் பாக்குது
அதுக்கொரு பரிகாரம் தான் தேடுது
சாமியின்னு பேர் சொல்லும்
பொய்யான ஆசாமியத் தேடுது
ஜாதகத்தை, மாத்திடப் போறான்னு தங்கக் காசை வீசுது
தியானம் கத்துத் தாரனுன்னு கப்பம் கேக்குறான்
உன் கணக்க யாரு கேக்குறான்?
ஆண்டவனே இது உனக்கு சம்மதம் தானா?
எங்களுக்கு மிஞ்சுனது பொலம்பல் தானா?

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவக் கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை
மாட்டி வைக்கும் எப்பொழுதும் வம்புல
அதை மாத்திவிட யாருக்குமே தெம்பில

கானகத்திலே சீதைக்குத் தான்
கோடு கிழிச்சான் ஒரு காலத்திலே
மூணு முடிச்சால் துன்பம் எனும் கோட்டை விட்டு
தாண்டாமல் தாங்கும் பெண் ஜென்மம்

கட்டிலுக்கு மட்டுந்தானா பொம்பளை?
அவக் கஷ்டத்தில யாருக்குமே பங்கில்லை
மாட்டி வைக்கும் எப்பொழுதும் வம்புல
அதை மாத்திவிட யாருக்குமே தெம்பில



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link