Enthan Kural

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
நண்பனே நண்பனே நண்பனே

இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
இரவென்றும் பகல் என்றும் உனகில்லையே
இளங்காலை பொன்மாலை உனகில்லையே
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்

ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே
மது கின்னம்தனை எடுத்து
பெண்ணை விலை கொடுத்ததும்
விழி மூடுமா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
வரவின்றி செலவானால் தவறில்லையே
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே'
நாளை உன் கையேடு உனகில்லையே

யாரிடம் தவறில்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே
நீ கடந்த காலங்களை
களைந்து எரிந்து விடு
விழி மூடுமே

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான்
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே

இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்



Credits
Writer(s): Deva Ind, Agathiyan
Lyrics powered by www.musixmatch.com

Link